கர்நாடக மாநிலத்தில் மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது. அரசியல் கட்சிகள் மக்களை ஈர்க்கும் வகையில் வாக்குறுதிகளை வழங்கிவருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய பேருந்துப் பயணமான 'பிரஜா த்வனி யாத்ரே' எனும் பிரசாரத்தை முன்னெடுத்துவருகிறது. அந்த பிரசாரத்தில், `கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மாதம்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ எனத் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரமே வழங்கவில்லை இதனால்தான் மக்கள்தொகை பெருகியது. இப்போது, இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் கூறுகிறது. இலவச மின்சாரம் தருவார்கள் என்று நம்புகிறீர்களா... அவர்கள் காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகே 24 மணி நேர மின்சாரம் கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் குறைவான மின்சாரத்தை வழங்கியதால்தான் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது" எனக் கிண்டலாகத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/upXYGLv
0 Comments