கர்நாடக – மகாராஷ்டிரா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கர்நாடகாவில் இருக்கும் `பெலகாவி’ எனப்படும் பெல்காம், பீதர், கார்வார் ஆகியவை மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் எல்லையோரத்தில் உள்ள, 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என, மராத்திய அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல், மகாராஷ்டிரா சங்கிலி மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள, 53 கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டுமென கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பிரச்சினை பல ஆண்டுகளாக முடிவுறா தொடர்கதையாக உள்ளது.
இருமாநில அரசுகளும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது. பிரச்னை மீண்டும் வலுப்பெற்று, இருமாநில எல்லையிலும் கடந்த ஒரு வாரமாக, அவ்வப்போது பஸ் கண்ணாடிகள் உடைப்பு, கன்னட மற்றும் மகாராஷ்டிர அமைப்பினரின் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவுகிறது.
கைது செய்ய உத்தரவு!
மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பிரச்னை ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களான மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜா தேசாய் ஆகியோர், இன்று, பெல்காம் செல்வதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்து, `பெல்காமில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது, அமைச்சர்கள் வந்தால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம்,’ என, உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மாஜிஸ்திரேட் நித்தேஷ் பட்டிலும், அமைச்சர்கள் வருகைக்கு சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளார்.
கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெல்காமில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இன்று காலை, பெல்காம் மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளதால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நிலமை கட்டுக்குள் உள்ளது!
இது குறித்துபெல்காம் போலீஸ் ஐ.ஜி., சதீஸ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம், ‘``பெல்காம் மாவட்டப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கர்நாடக – மகாராஷ்டிரா எல்லையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் தடையை மீறி கர்நாடக பகுதிக்குள் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
தற்போது, அமைச்சர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெல்காம் நகரப்பகுதிக்குள் கன்னட அமைப்பினரும் குவிந்துள்ளனர். இவர்கள், பெல்காம் நகரப்பகுதியை விட்டு மாநில எல்லைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், கன்னட அமைப்பினரையும் கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, நிலமை கட்டுக்குள் உள்ளது,’’ என்றார்.
``வேறொரு நாளில் பார்வையிடுவோம்!”
இதுகுறித்து, மகாராஷ்டிரா அமைச்சர் சம்புராஜ் தேசாய் நிருபர்களிடம், ''பெல்காம் பகுதியை பார்வையிடச் செல்வதாக கர்நாடக அரசுக்கு, அரசு முறைப்படி முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால், நாங்கள் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி, கர்நாடக அரசு பெல்காம் செல்ல தடை விதித்துள்ளது. இதனால், நாங்கள் வேறொரு நாளில் பார்வையிட திட்டமிட்டுள்ளோம்; நாங்கள் தேதியை மட்டுமே மாற்றி வைத்துள்ளோமே தவிர பெல்காம் பகுதியை பார்வையிடும் திட்டத்தை ரத்து செய்யவில்லை,'' எனக்கூறினார்.
எல்லைப் பிரச்னை கர்நாடக, மகாராஷ்டிராவில், பாஜக Vs பாஜக கூட்டணி(மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி) என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/IFmcplj
0 Comments