``தண்ணீர் சிறை; குரல் மாற்றிப் பேசச்சொல்லி கொடுமை..!" - மியான்மர் அனுபவம் பகிரும் மும்பை இளைஞர்

தாய்லாந்தில் வேலை என்று கூறி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மியான்மரில் அடிமைகளாக தங்கவைக்கப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மியான்மர் தீவிரவாதிகள் வேலை தேடிச் சென்றவர்களை தங்கள் காவலில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு சைபர் குற்றங்களில் எப்படி ஈடுபடவேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுத்து அதில் ஈடுபட வைக்கின்றனர்.

அவர்களின் பிடியிலிருந்த 3 பேர் தலா 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து விடுதலையாகி மும்பைக்கு திரும்பியிருக்கின்றனர். மும்பைக்குத் திரும்பிய மூன்று பேரில் ஒருவரான தேஷ்முக் அளித்தப் பேட்டியில், ``மியான்மரில் எங்களை கழுத்தளவு தண்ணீரில் 24 மணி நேரம் அடைத்து வைத்திருந்தனர். பலத்த ஆயுதங்களுடன் தண்ணீர் சிறைக்கு பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர். எங்களிடம் ஐபோன் கொடுத்து ஆயிரக்கணக்கானவர்களின் போன் நம்பர்களை கொடுத்துப் பேசச்சொல்வார்கள்.

மியான்மரில் தங்கவைக்கப்பட்ட இடம்

எதிர்முனையில் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் பெண்ணாகவும், பெண்ணாக இருந்தால் ஆணாகவும் பேசவேண்டும் என்று எங்களுக்கு பயிற்சி கொடுத்திருந்தனர். எதிர்முனையில் இருப்பவர் வீடியோ காலில் வரவேண்டும் என்று சொன்னால் உடனே அருகில் இருக்கும் தாய்லாந்து பெண்ணிடம் போனைக் கொடுத்து வீடியோ காலில் பேசச்செய்யவேண்டும். அவர்கள் கொடுக்கும் இலக்கை நிறைவேற்றவில்லையெனில் கடுமையாக அடித்து உதைக்கின்றனர். அவர்களிடம் அனைத்து நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான சிம்கார்டுகள் இருக்கின்றன.

இம்மானுவேல்

அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து ஆள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்தார். அவருடன் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட மற்றொருவரிடம் இது குறித்து கேட்டதற்கு, தன்னால் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்தார். அவருடன் இருந்த அவரின் மனைவி இது குறித்து, ``என் கணவரை இந்த நிலைக்கு மாற்றிய ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார். இந்தக் குற்றம் தொடர்பாக லிபியாவைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் உத்தரப்பிரதேச போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/kXzctdq

Post a Comment

0 Comments