மத்தியப் பிரதேச மாநிலம், சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த அடி பம்பு ஒன்று சற்று வித்தியாசமாக தூசி படிந்த நிலையில் இருந்திருக்கிறது. இதைக் கண்ட அதிகாரிகள், அந்த அடிபம்பை அடித்து பார்த்தபோது அதில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
#MadhyaPradesh: Here, hand-pumps give out liquor!
— The Times Of India (@timesofindia) October 12, 2022
Watch: https://t.co/l8eHf28BNw pic.twitter.com/MLm5GHi82o
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை தோண்டியபோது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் தேவைப்படும்போது சாராயத்தை அடி பம்பில் அடித்து பாலித்தீன் பைகளில் நிரப்பி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. அதையடுத்து டேங்கிலிருந்து சாராயத்தை வெளியேற்ற முடிவுசெய்த போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிபம்பில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/8E9wQbp
0 Comments