``பாஜக நாட்டை அழிக்கிறது; அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது" - சித்தராமையா காட்டம்

கர்நாடக மாநிலம், பெலகாவியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், `` ஆளும் கட்சி அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது. சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் "தேச விரோதிகள்". பாஜக நாட்டை அழிக்கிறது. படித்தவர்கள் வாக்களிக்கும்போது தவறான முடிவை எடுக்கக்கூடாது.

பாஜக தலைமை

தற்போதைய பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் நிலையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.19 லட்சம் கோடிக்கு மேல், வரி வருவாய் மத்திய அரசுக்கு செல்கிறது, ஆனால் வெறும் ரூ.4 லட்சம் கோடி மட்டுமே திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு மாநிலத்திற்கு அதிக நிதி வழங்கியதாக விளம்பரம் செய்து வருகிறது’’ என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/dgqJG13

Post a Comment

0 Comments