நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு: ``தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம்" - அல்கொய்தா மிரட்டல்

மொகமது நபி குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மலேசியா, குவைத், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மொத்தமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு வளைகுடா நாடுகள் இந்திய பொருள்களை புறக்கணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இப்பிரச்னையால் நுபுர் சர்மாவை பாஜக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டது. ஆனாலும் இந்த பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 1,000 பேருக்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளும் இதில் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அல்கொய்தா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள கடிதத்தில், `மொகமது நபியின் கவுரவத்திற்காக நடக்கும் போரில் மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்.

மிரட்டல் கடிதம்

மொகமது நபியை அவமதித்தவர்களை கொலை செய்வோம். நமது மொகமது நபியை அவமதிக்க துணிந்தவர்களின் பட்டாளத்தை அழிப்போம். எங்கள் உடலிலும், எங்கள் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டுவோம். காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உ.பி மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்கு காத்திருக்க வேண்டும். நாங்கள் மொகமது நபியின் கவுரவத்திற்காக போராடுகிறோம். மற்றவர்களும் போராடி தங்கள் உயிரை கொடுக்கவேண்டும் " என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளின் மிரட்டலால் இவ்விவகாரத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சர்ச்சைக்கு வித்திட்ட நுபுர் சர்மாவிற்கு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கு டெல்லி அரசு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. அல்கொய்தாவின் மிரட்டல் கடிதம் சமூக வளைத்தளத்தில் பரவி இருக்கிறது. இம்மிரட்டலை தொடர்ந்து தீவிரவாதிகள் குறிப்பிட்ட நகரங்களில் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/8bSFXps

Post a Comment

0 Comments