``நான் கோழை இல்லை... போராளி'' - ஆவேசமான மம்தா பானர்ஜி - காரணம் என்ன?

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை ஆதரித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தார். அதற்கு முன்பு கங்கா ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து `ஜெய் ஸ்ரீ ராம்' என் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், கருப்புக் கொடியைக் காட்டி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்தா பானர்ஜி

பின்னர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாரணாசியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, ``விமான நிலையத்திலிருந்து காட் பகுதிக்குச் செல்லும்போது என் வாகனத்தை சில பா.ஜ.க-வினர் தடுத்து நிறுத்தினர். மேலும், என்னை திரும்பி போகச் சொல்லி மிரட்டினார்கள். நான் வாரணாசிக்கு வந்தபோது பா.ஜ.க-வினர் என் மீது தாக்குதல் நடத்தியது, அவர்கள் அதிகாரத்தை இழக்கப்போவதை காட்டுகிறது. என் வாழ்வில் நான் பல முறை துப்பாக்கி குண்டுகளையும் , தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளேன். நான் கோழை இல்லை. நான் ஒரு போராளி. ஆனால் ஒருபோதும் யாருக்கும் அடிபணிந்ததில்லை'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/e9a0SwG

Post a Comment

0 Comments