மாணவர் நவீன் மரணம் எதிரொலி; கர்நாடகத்தில் நீட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர் உக்ரைனில் மருத்துவக் கல்வி 4-ம் ஆண்டு பயின்றுவந்தார். `97 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், என் மகனுக்கு இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. மேலும், தனியாரில் படிக்க வைக்கும் அளவு வசதியில்லை. அதனால்தான் அவனை உக்ரைனுக்கு அனுப்பி இழந்துவிட்டோம்' என அவரின் தந்தை சேகரப்பா தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, `மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களின் மரண மணி நீட்' என விமர்சித்திருந்தார்.

அதையடுத்து, கர்நாடக மாநிலம் முழுவதும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் நீட் தேர்வு `கூட்டாட்சியின் விதி மீறல்... எனவே, அதை ஒழிக்க வேண்டும். மேலும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டை போல இங்கும் நீட் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என நீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்,.

#ban_neet ஹெஷ்டக்

இந்த நிலையில், கர்நாடகா முழுவதும் உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்ற மாணவர் நவீன் சேகரப்பாவின் மரணம், நீட் தேர்வு எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அதன் காரணமாக, `#BanNEET' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/hS5bZn6

Post a Comment

0 Comments