மும்பை கார்ரோடு மேற்கு பகுதியில் ஏக்தா ஹைட்ஸ் என்ற 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இருக்கிறது. ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு மட்டுமே இருக்கிறது. கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணி, பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் கட்டடத்தை சுற்றிலும் கம்பு கட்டப்பட்டு இருந்தது. இதை திருடன் ஒருவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இந்தக் கட்டடத்தின் பின்புறம் இருக்கும் கம்பு வழியாக திருடன் ஒருவன் வேகமாக மேலே ஏறிவிட்டான். அதை கட்டட வாட்ச்மென் கவனிக்கவில்லை. அதனால், திருடன் நேராக 5-வது மாடிக்கு சென்று அங்குள்ள வீட்டிற்குள் சென்றுவிட்டான். அவன் நுழைந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர். உடனே ஜன்னல் வழியாக வெளியில் வந்த திருடன் மீண்டும் கம்பி மூலம் மேலே ஏற ஆரம்பித்தான்.
அதற்குள் 5-வது மாடியில் இருந்தவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்தனர். கட்டட வாட்ச்மென் தன்னிடமிருந்த விசிலை ஊதி அனைவரையும் உஷார்படுத்தினார். அதனால், கட்டடத்தில் இருந்த அனைவரும் எழுந்துவிட்டனர். அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். திருடன் 12 மாடியில் இருக்கும் பூட்டிய வீட்டிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டிற்குள் இருப்பது ராகுல் என்ற திருடன் என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுகொண்டு, ``ராகுல் வெளியில் வா..." என்று போலீஸார் அழைத்தனர். ஆனால் திருடன் வரவில்லை. உடனே போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவனைக் கைது செய்தனர்.
திருடன் ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டில் வாட்ச், மொபைல் போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை திருடியிருந்தான். அவன் 5-வது மாடியில் நுழையும் முன்பு 2-வது மாடியில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு வீடு பூட்டி இருந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருள்களை ஆங்காங்கே தூக்கி போட்டிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அந்த குடியிருப்பைச் ஜெய்ஸ்ரீ நாயர் கூறுகையில், ``எங்கள் கட்டடத்தில் வாட்ச்மென் மட்டுமல்லாது, ஒவ்வொரு வீட்டிலும் விசில் கொடுத்திருக்கிறோம். அவசர உதவி, அல்லது எச்சரிக்கை செய்ய விசிலை பயன்படுத்தும்படி கேட்டிருந்தோம்.
வீட்டிற்குள் திருடன் புகுந்திருப்பது தெரிந்தவுடன் வாட்ச்மென், கார் கழுவுபவர்கள், பக்கத்து கட்டடத்தில் வசிப்பவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர். திருடன் 5-வது மாடியிலிருந்து 12-வது மாடிக்கு சென்றுவிட்டான். போலீஸார் விரைந்து வந்து அவனைக் கைது செய்தனர். விசில் அனைவரிடம் கொடுத்தது திருடனை பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது" என்றார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் திரிமுக் கூறுகையில், ``பிடிபட்டுள்ள திருடன் ராகுல் அடிக்கடி இது போன்று திருட்டில் ஈடுபடுபவன். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு சில மாதங்களுக்கு முன்புதான் வெளியில் வந்திருந்தான். ராகுல் பெரும்பாலும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக கம்புகள் கட்டியிருக்கும் கட்டடங்களை குறிவைத்து திருடி வந்தான். விலை உயர்ந்த மதுபானங்கள், வாட்ச்கள் என குறிப்பிட்ட சில பொருள்ளை மட்டுமே குறி வைத்து திருடுபவன்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/2vk7pi4
0 Comments