``உ.பி-யில் மார்ச் 10-ம் தேதி பாஜக ஆட்சியமைக்கும்!" - யோகி ஆரூடம்

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலானது கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்த தேர்தலில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்துள்ளது. 7-ம் கட்ட வாக்குப்பதிவானது வருகின்ற 7-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அந்த மாநில முதல்வர் யோகி ஆத்யநாத் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோலியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அகிலேஷ் - மாயாவதி

அப்போது பேசிய யோகி, ``6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போதே பா.ஜ.க-வின் வெற்றி 300 தொகுதிகளைத் தாண்டிவிட்டதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது மாநிலம் முழுவதும் பா.ஜ.க மட்டுமே தெரியும். இதற்குப் பயந்து சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் இப்போதே வெளிநாடுகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர். மாநிலத்தில் திறமையான ஆட்சி அமைந்தால், வளர்ச்சி ஏற்படும்.

யோகி ஆதித்யநாத்

மார்ச் 10-ம் தேதி உ.பி-யில் பா.ஜ.க ஆட்சி அமையும் போது, ​​பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியன்று இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/AMlqzfe

Post a Comment

0 Comments