தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப் போரின் மையமாக மாறிவிட்டது.
அணு ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த இந்தப் போர் என்று கூறிய அமெரிக்கா, இப்போது ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறக்கவும், அங்கே ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதை முனைப்புடனும் எதிர்த்து வருகிறது அமெரிக்கா.
விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவிற்கு!
இந்த நேரத்தில் நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், "ஈரானை நாம் முற்றிலும் வீழ்த்திய பிறகு, அவர்கள் இப்போது மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வெகு விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக நான் அறிவிக்கப்போகிறேன். அதனால் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் பெட்ரோலுக்கு நீங்கள் மிகக் குறைந்த அளவில் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருந்தால், உலகிலேயே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் முதன்மை நாடான ஒரு மிக மோசமான நாட்டின் கையில் அணு ஆயுதம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
எனவே, பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு $4 ஆக உயர்ந்து, நீங்கள் கொஞ்சம் கூடுதல் பணம் கொடுக்க நேரிடும் போது இதைக் நினைத்துப் பாருங்கள்.
இந்தப் போருக்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நான் சரியான காரியத்தைத்தான் செய்திருக்கிறேன்." என்றார்.
'அது முடியாது' - ஈரான் பதிலடி
ட்ரம்பின் இந்தப் பேச்சிற்குப் பதிலடியாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாடி, "ஈரானை வீழ்த்திய பிறகு, ஹார்முஸ் நீர்ச்சந்தியை வெகு விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்!
ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒரு ட்வீட் மூலமாகவோ, போர்க்கப்பலை அனுப்பியோ, ஒரு உத்தரவைப் பிறப்பித்தோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சின் மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது.
ஈரான் மிரட்டல்களுக்குப் பயப்படுவதும் இல்லை. அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதும் இல்லை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ترامپ گفته بعد از شکست ایران، بزودی تنگه هرمز را قلمرو آمریکا اعلام خواهد کرد!
— Gharibabadi (@Gharibabadi) August 14, 2026
تنگه هرمز را نه با توییت میتوان تصاحب کرد و نه با ناو هواپیمابر، نه با صدور فرمان و نه با سخنرانی انتخاباتی. ایران نه از تهدید می هراسد و نه با نمایش قدرت مرعوب میشود. (۱)
from India News https://ift.tt/GWd08Lp
0 Comments