ஒமைக்ரான் பரவல்; அஸ்ஸாமில் இரவு நேர ஊரடங்கு அமல்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய வகை திரிபான ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகள் ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கினை அந்த மாநில அரசு இன்று முதல் அமல்படுத்தவிருக்கிறது.
அஸ்ஸாமில் இன்று முதல் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வரும் 31-ம் தேதி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக இரவு நேர ஊரடங்கு ஒரு நாள் ரத்தாகிறது. மேலும், திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையளார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், அஸ்ஸாம் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள்
0 Comments