மேற்கு மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி தொண்டர்கள் சரத் பவாருக்கு ஆதரவு... பாஜக ஷாக்!

மகாராஷ்டிராவின் மேற்கு பகுதி எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதோடு மேற்கு மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி தொகுதியை மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சிய தொகுதிகளை பா.ஜ.கவும் சிவசேனா(ஷிண்டே) எடுத்துக்கொண்டன. இத்தேர்தலில் அஜித் பவார் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு முக்கிய தொகுதிகளான சதாரா மற்றும் மாதா தொகுதிகள் கூட அஜித் பவார் அணிக்கு கிடைக்கவில்லை.

அதேசமயம் சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த இரண்டு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. மாதா தொகுதியில் அஜித் பவார் கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய உத்தம் ஜன்கர் கூட சரத்பவாருக்காக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். உத்தம் ஜன்கரை சிறப்பு விமானத்தில் நாக்பூர் வரவழைத்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து மாதா வந்தவுடன் நேரடியாக சரத்பவாரை சந்தித்து பேசியிருக்கிறார். அதோடு மாதா தொகுதி தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) வேட்பாளரை ஆதரிக்கவும் உத்தம் முடிவு செய்துவிட்டார்.

மற்றொரு மேற்கு மகாராஷ்டிரா தொகுதியான கோலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) மாநில துணைத்தலைவர் ஏ.ஒய் பாட்டீல் முடிவு செய்துள்ளார். சதாராவிலும் அஜித் பவார் கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள மறுக்கின்றனர். அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான எம்.எல்.ஏ. மக்ரந்த் பாட்டீல் கூட பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார். இதே போன்று சாங்கிலி தொகுதியையும் பா.ஜ.க-விற்கு அஜித் பவார் விட்டுக்கொடுத்துவிட்டார். இதனால் அஜித் பவார் கட்சி தொண்டர்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சரத் பவார், அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் போட்டியிடவேண்டிய இடங்களை அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதால் தொண்டர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் பா.ஜ.க வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அஜித் பவாரும் பாராமதியை தவிர்த்து பிற மேற்கு மகாராஷ்டிரா தொகுதியில் பிரசாரம் செய்ய செல்லவில்லை. பாராமதியில் தனது மனைவியை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்பதற்காக அங்கேயே முடங்கி கிடக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த தேர்தல் கருத்துக்கணிப்பில் அஜித்பவார் வேட்பாளர்கள் 4 பேரும் தோல்வி அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து அஜித்பவாரின் உறவினரான எம்.எல்.ஏ.ரோஹித்பவார் கூறுகையில், ''அஜித்பவாரின் முக்கியத்துவத்தை குறைக்கவேண்டும் என்பதற்காக அவரை பாராமதியை தவிர வேறு எங்கும் பிரசாரம் செய்யவிடாமல் பா.ஜ.க முடக்கி போட்டு இருக்கிறது'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/26Q470x

Post a Comment

0 Comments