சட்டசபை நேரலை விவகாரம் - முடிவெடுப்பதில் தமிழக அரசு தடுமாறுகிறதா?!

சென்னை, உயர் நீதிமன்றத்தில், "சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறி மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த சூழலில் சம்பந்தப்பட்ட விவகாரம் கடந்த 16.4.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விஜயகாந்த்

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாக தகவல்கள் கிடைத்த பின் முடிவு எடுக்கப்படும்" என்றார். அதற்கு நீதிபதிகள், "எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?. இது குறித்து ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும்" எனக் கூறி, விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என தி.மு.க வாக்குறுதி கொடுத்து இருந்தது. ஆனால் அவ்வாறு செய்ய முடியாது. நேரலையாக வழங்கினால் பிரச்னை ஏற்படும். சில நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பார்கள். அது அவைகுறிப்பில் இடம்பெறாது. நேரலையில் அது வந்துவிட்டால் பிரச்னை ஏற்படும். எடுத்துக்காட்டுக்கு அரசு கொடுக்கும் அறிக்கையில் இல்லாததை கவர்னர் படிக்கிறார். அதையெல்லாம் அவர்களால் வெளியிட முடியாது.

ப்ரியன்

பார்லிமெண்டில் நேரலையில் விவாதங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக பேசும் போது, அவர்களை காட்ட மாட்டார்கள். அங்கு நேரலையிலேயே சென்சார் செய்கிறார்கள். அப்படிதான் இங்கு நேரலையில் சட்டசபை நிகழ்வுகளை வழங்கினாலும் சென்சார் செய்துதான் கொடுப்பார்கள். தி.மு.க இல்லை எந்த கட்சியாக இருந்தாலும் அதை செய்ய மாட்டார்கள். ஏனெனில் சபை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் பேசுவார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே அதிகபட்சமாக எவ்வளவு செய்ய முடியுமோ அதை தற்போதே செய்கிறார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/OxNB0CM

Post a Comment

0 Comments