அமெரிக்க குடிமகனான பிரிட்டன் இளவரசர்... பின்னணி என்ன?

பிரிட்டன் அரச குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உலகச் செய்திகளில் நிச்சயம் இடம்பிடிக்கும். அந்த வகையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி பற்றிய ஒரு செய்தி உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

அமெரிக்கரான பிரிட்டன் இளவரசர்?

பிரிட்டன் அரசர் சார்லஸின் மகனான ஹாரி, 2020-ம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 2019-ல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை தொடங்கியிருந்தார் ஹாரி. அந்தச் சமயத்தில், அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வசிப்பிடமாகவும், சொந்த நாடாகவும் பிரிட்டனைக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், தனது புது நாடாக அமெரிக்காவைக் குறிப்பிட்டிருக்கிறார் ஹாரி.

மன்னர் சார்லஸ் - இளவரசர் ஹாரி

இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பிரிட்டனின் இளவரசராக அறியப்பட்டவர், தனது சொந்த நாட்டையே மாற்றிக்கொண்டது உலக அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஹாரி சொந்த நாட்டை விட்டு வெளியேறிய பின்னணி குறித்த விவாதங்களும் கிளம்பியிருக்கின்றன.

பின்னணி என்ன?

2018-ம் ஆண்டு பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலுக்கு திருமணம் நடந்தது. பிரிட்டன் அரச குடும்பத்தின் முதல் வெள்ளையர் அல்லாத இளவரசி என்ற பெருமை மேகனுக்கு கிடைத்தாலும், அரச குடும்பத்தில் அவருக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவிவந்தது. திருமணத்துக்கு முன்பே பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதையெல்லாம் சரிக்கட்டி மேகனைத் திருமணம் செய்துகொண்டார் ஹாரி. இருவருக்கும் திருமணப் பரிசாக சசெக்ஸ் அரண்மனையை பரிசளித்தார் மறைந்த ராணி எலிசபெத்.

ஹாரி

திருமணத்துக்குப் பிறகும் அவ்வப்போது மேகனுக்கு எதிரான குரல்கள் அரச குடும்பத்தில் எழுந்துவந்துன. ஒருகட்டத்தில் பெரும் மனக்கசப்பு ஏற்பட, அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் ஹாரி. சசெக்ஸ் அரண்மனையிலிருந்து வெளியேறியது ஹாரி குடும்பம். அதன் பிறகுதான் அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கினர்.

``இனரீதியாக மேகனை அரச குடும்பத்தினர் டார்கெட் செய்ததும், அதன் காரணமாக ஹாரிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமும்தான், சொந்த நாட்டையே அவர் மாற்றிக் கொள்ளக் காரணமாக அமைந்திருக்கிறது'' என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/X4woCSW

Post a Comment

0 Comments