`கடன் மட்டும் ரூ.649 கோடி; தன்பெயரில் ஒரு கார் கூட இல்லை’ - ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு தெரியுமா?!

ரக்கோணம் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. உறுதிமொழி பத்திரத்துடன் அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை அலசினோம். கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி, கடைசியாக வருமானவரி கணக்குக் காட்டியிருக்கிறார் ஜெகத். அப்போது, தனது ஆண்டு வருமானம் 45,62,880 ரூபாய் எனக் காண்பித்திருக்கிறார். அவரது மனைவி அனுசுயா பெயரில் கடைசியாக 2021-ம் ஆண்டு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார். அப்போது, மனைவிக்கு ஆண்டு வருமானம் 40,13,900 ரூபாய் எனக் குறிப்பிட்டிருக்கிறார். துரதிஷ்டவசமாக ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா கடந்த 2020 டிசம்பர் 15-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். தனது பெயரிலும், மனைவி பெயரிலும் சேர்த்து ‘அசையும்’ சொத்துகள் 14,37,09,982 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் பட்டியலிட்டிருக்கிறார் ஜெகத். அதேபோல, ‘அசையா’ சொத்துகள் இருவரின் பெயர்களிலும் சேர்த்து 39,08,77,846 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக மொத்தம் 53,45,87,828 ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

ஜெகத்ரட்சகன்

ஆனாலும் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பிறரிடமிருந்து மட்டுமே கடனாக ரூ.649 கோடியே 50 லட்சம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், வருமானவரி மேல்முறையீடு தொடர்பாக 7,26,70,968 ரூபாய் தொகையையும் நிலுவையில் காட்டியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்துக்கு அருகேயுள்ள கலிங்கமலை கிராமத்தைப் பூர்விகமாகக்கொண்டவர் ஜெகத்ரட்சகன். சொந்தக் கிராமத்திலும், திண்டிவனம் பகுதிகளிலும் விவசாய நிலங்களாகவும், மனைகளாகவும் சொத்துகள் அவருக்கு இருக்கின்றன. சென்னையில் தி.நகர், மகாலிங்கபுரம், வண்டலூர் போன்ற பகுதிகளில் மனைவி பெயரில் வணிக வளாகங்களும் இருக்கின்றன. அவற்றில் பங்குதாரராகவும் இருக்கிறார் ஜெகத். அதேபோல, சென்னை அடையாறு, குரோம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், சொந்தக் கிராமமான கண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலும் குடியிருப்பு வளாகங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதைக்கு கையில் ரொக்கமாக 4,21,200 ரூபாய் மட்டுமே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ஜெகத்ரட்சகன். ஏறக்குறைய 16 வங்கி கணக்குகளில் 1,32,82,169 ரூபாய் பணத்தை ‘வைப்பு’ தொகையாக வைத்திருக்கிறாராம். மனைவி பெயரில் இருக்கின்ற 12 வங்கிக் கணக்குகளிலும் சில லட்சங்களை இருப்புத் தொகையாக காண்பித்திருக்கிறார். ‘டெய்ரோ லேப்ஸ்’ என்ற மருந்து நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறாராம் ஜெகத்ரட்சகன். ‘சிப்ரைம் செமிகண்டக்டர், ஜாசன் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட், ஹோட்டல் சந்திரலேகா, ஜே.ஆர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜெகத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சுவாமிக்கண்ணு ஜெகத் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட், ஏ.ஜே.ஆர் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட், அக்கார்டு சர்வதேச பள்ளி, ஜெகத் எண்டர்பிரைசஸ், ரெட்ஜெம் மருத்துவமனை போன்றவற்றில் ஏறக்குறைய ரூ.2 கோடிக்குமேலான தொகையை முதலீடு செய்திருப்பதாகவும் பட்டியலிடுகிறார் ஜெகத்ரட்சகன்.

ஜெகத்ரட்சகன்

இவற்றில் சில நிறுவனங்களில் இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும்கூட பொறுப்பு வகிக்கிறார் ஜெகத். அதுமட்டுமல்லாமல், ‘ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை, ஆழ்வார்கள் ஆய்வு மையம், தாகூர் கல்வி அறக்கட்டளை, பாரத் உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும் நிர்வாக அறங்காவலர், தலைவர் போன்ற பொறுப்புகளில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ஜெகத்ரட்சகன். அதோடு, ‘அக்கார்டு பிளாட்டினம் டயர்ஸ், ஜே.ஆர் தங்க மாளிகை, அக்கார்டு ஆர்னமென்ட், ரிஹா ஓஷன் ரிசார்ட்ஸ், ஜே.ஆர்.என் ரிசார்ட்ஸ் அண்ட் ஹோட்டல்ஸ், ராமிஃபை சொல்யூஷன்ஸ், ஜே.ஆர் கோல்டு கிங்டம், அக்கார்ட்டு டிஃபென்ஸ் சிஸ்டம், ஸ்ரீராயல் ப்ளூ மவுண்டன் ஹாஸ்பிட்டல், எஸ்.எம்.டி அனுசுயா ஹாஸ்பிட்டல் ஆகிய நிறுவனங்களிலும் ஒரு பங்குதாரராக இருக்கின்றாராம் ஜெகத்ரட்சகன். இவ்வளவு இருந்தும் ஒரு கார்கூட தன் பெயரில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஜெகத்ரட்சகன் தனது மனைவி பெயரில் வாங்கியிருக்கக்கூடிய இரண்டு கார்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறார். வழக்கு விவரங்கள், நகை இருப்புகள் குறித்தும் இன்னமும் நீள்கின்றன ஜெகத்ரட்சகனின் வேட்புமனு விவரங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/P6w1jYi

Post a Comment

0 Comments