Tamil News Live Today: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து! - போக்குவரத்து துறை உத்தரவு

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கை அதிவேகமாக ஓட்டியபோது டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார். இந்த வழக்கில், அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TTF Vasan with Hayabusa

மேலும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம், டிடிஎஃப் வாசன் வழக்கில் கடுமை காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/G1iMadz

Post a Comment

0 Comments