"விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை!"- 82 வயது மூதாட்டியின் விருப்பத்தை நிறைவேற்றிய நீதிமன்றம்

சண்டிகரைச் சேர்ந்த இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், 1963-ம் ஆண்டு பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் இல்லறம் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, 1984-ம் ஆண்டு அந்த விமானப்படை அதிகாரி, சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கணவன்-மனைவி பிரிந்திருந்த இந்த இடைவெளியில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தொடர்ந்திருக்கிறது. இதனால், மனம் வெறுத்த இந்திய விமானப்படை அதிகாரி, 1994-ம் ஆண்டு பஞ்சாப் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு ஹரியானா, பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

முதிய தம்பதி

இந்த வழக்கில் மனைவிமீதான குற்றங்களை நிரூபிக்கத் தவறிய கணவனிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாததால், வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இதற்கிடையில் அந்த அதிகாரி விமானப்படையிலிருந்து ஓய்வும் பெற்றார். சுமார் 25 ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவாகரத்து வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 89 வயதான இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியும், 82 வயதான அவரின் மனைவியும் ஆஜராகியிருந்தனர்.

நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், ``எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற களங்கத்துடன் மரணிக்க விரும்பவில்லை.

முதிய தம்பதி

எனக்கு அந்தப் பெயர் வேண்டாம். எனவே, இந்த விவாகரத்தை நிறுத்தி வைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நீதிபதி, ``மனித வாழ்வில் திருமணம் என்ற பந்தம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது" எனக் குறிப்பிட்டு, முதியப் பெண்ணின் விருப்பத்துக்கேற்ப இந்த விவாகரத்து வழக்கை நிராகரித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/R2vFHnl

Post a Comment

0 Comments