Tamil News Today Live: திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு - ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

ஆர்.பி.வி.எஸ்.மணியன்

ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்க முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர் குறித்து ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக தனிப்படை போலீஸார், இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில், நள்ளிரவில் கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டையில் 3-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு!

அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமசந்திரன் வீடு, அலுவலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முத்துபட்டினத்தில் உள்ள அவரின் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகத்திலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஆடிட்டர் முருகேசன், அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டிலும் சோதனை தொடர்ந்து வருகிறது.



from India News https://ift.tt/f4xcyt3

Post a Comment

0 Comments