Tamil News Today Live: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்கிற சத்ய நாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

தி.நகர் சத்யா

2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யா, 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரை, 2 மாதங்களில் விசாரணை செய்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.



from India News https://ift.tt/AoGYgkB

Post a Comment

0 Comments