``ரஷ்யா தனிமைப்படுத்தப்படுவதை G20 உறுதிப்படுத்துகிறது!'' - பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடந்த இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒருமனதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் உலகளவில் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

மோடி - புதின்

அப்போது பேசிய அவர், ``G20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான G20 நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்திருக்கின்றன. ரஷ்யா இன்னும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. பிராந்தியங்களை கையகப்படுத்துதலுக்கான அச்சுறுத்தலையும் தவிர்க்க வேண்டும். G20 மாநாடு உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதி நிலவ உறுதியேற்றிருக்கிறது. பிரதமர் மோடிக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டார்.

G20 மாநட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `` டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது.'' என இந்தியாவைப் பாராட்டி வருகிறார்.

மோடி - இம்மனுவேல் மாக்ரோன்

ஆனால் இந்தியா தரப்பில், ``G20 மாநாடு என்பது புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரசினைகளை தீர்க்கும் தளமல்ல. இது உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. காலநிலை நெருக்கடி பற்றி பேசவே இங்கு கூடியிருக்கிறோம். எனவே, ஜி20 மாநாடு மற்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/F8xAze9

Post a Comment

0 Comments