தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிய தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கோவில்பட்டியை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/527eeba7-8a2a-44dd-84e4-69dc25a38e4a/20230907_211438.jpg)
இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தினுடைய வடக்குப் பகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னால் கோவில்பட்டியை மையமாக வைத்து ஒரு மாவட்டம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழகஅரசு காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். தி.மு.க அரசு, ஊழல் அரசு என்கிற விஷயம் இந்தியா முழுவதும் தெரிய வருகையில், தி.மு.க அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
எல்லாத் தளங்களிலும் மிகப்பெரிய தோல்வியை தழுவிக் கொண்டு வரும்போது அதை மடைமாற்றம் செய்வதற்காக அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இப்போது சனாதனம் என்கிற பூதாகரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆளும் தி.மு.க., தமிழக மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி சனாதனம்தான் எதிரி என்பதைப் போல ஒரு புதுக்கதையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வி அடைய வாய்ப்புகள் அதிகம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/b102c8b4-24d8-4b22-bdf9-98afd43cc51d/20230907_211848.jpg)
அந்த தோல்வியை மறைப்பதற்கு தடுப்பதற்காக மடைமாற்றம் செய்கிறார்கள். திராவிடம்தான் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கேடாக உள்ளது. வரும் 2021-ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/0huyexI
0 Comments