செலவே இல்லாமல் ஆதார் கார்டு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்... எப்படி?

ஆதார் கார்டு வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? ஆதார் எடுக்கும்போது இருந்த முகவரியும் இப்போது இருக்கும் முகவரியும் வேறா? இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால் உடனடியாக இந்த தகவல்களை அப்டேட் செய்வது அவசியம்.

இந்த தகவல்களை வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை இலவசமாக ஆன்லைனிலேயே செய்துக்கொள்ளலாம். இந்த சலுகை முதலில் ஜூன் வரை தரப்பட்டது. பின்னர் செப்டம்பர் 14-ம் தேதி வரையிலும், தற்போது டிசம்பர் 14-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு அப்டேட் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு!

பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களை ஆதாரில் அப்டேட் செய்ய முடியாமல் போய்விடும் அல்லது மறந்துவிடுவோம். இதை எல்லாம் தவிர்க்கும் விதமாக இந்த தகவல்களை இப்போது ஆன்லைனிலேயே இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

இந்த சேவை மூலம் ஆதாரில் உள்ள முகவரியை மாற்றவும், அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை அப்டேட் செய்ய முடியும். ஆன்லைனில் அடையாள மற்றும் முகவரி சான்றிதழை அப்டேட் செய்வது முற்றிலும் இலவசம். ஆனால் ஆதாரில் முகவரி மாற்ற வேண்டுமானால் அதற்கான சான்றை அப்லோட் செய்வதோடு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆதாரில் எப்படி அப்டேட் செய்ய வேண்டும்?

https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

உங்கள் ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சாவை (Captcha) நிரப்பிக்கொள்ளவும்.

இதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை பூர்த்தி செய்து login செய்யுங்கள்.

இதில் 'Document update' என்ற டேபிற்குள் சென்று முகவரி, மொபைல் எண் போன்ற மாற்றங்களை செய்துக்கொள்ளலாம்.

இந்த மாற்றங்கள் செய்ய அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இதில் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், புகைப்படம், பாலினம் ஆகியவற்றை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/ma2Uchw

Post a Comment

0 Comments