தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், ``கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பா.ஜ.க தரப்பிலிருந்தும், வலதுசாரி அமைப்புகள் தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் தற்போது டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழு ஒன்று, டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜியிடம், உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகக் கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறது.
அந்தக் கடிதத்தில், ``சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்பக் காயப்படுத்தினார். உதயநிதி ஸ்டாலின் உங்கள் மகன் மட்டுமல்ல, எந்தவொரு இந்தியனின் மத உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்த ஓர் அமைச்சரை அனுமதிக்காத இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் செய்த தமிழக அரசில் அமைச்சராக இருக்கிறார். இப்படியிருக்க, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். இது இந்தியர்களுக்கு எதிராகத் தீங்கிழைக்கும் நடவடிக்கையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சாக இருக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரிடமிருந்து வரும் இத்தகைய சட்டவிரோதமான, தண்டனைக்குரிய, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான அறிக்கைகள், நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியது. தமிழக அரசின் நிலைமையை இது பிரதிபலிக்கிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரின் கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கூற வேண்டும். இல்லையென்றால், அவருக்குப் பின்னால் முதல்வராகிய நீங்களும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த விவகாரத்தில் ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் டெல்லி பா.ஜ.க தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/ozaeyxF
0 Comments