கோவை சித்தாபுதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். 20 தங்கைகளுக்கு வாய்ப்பளிப்பேன். நன்கு படித்தவர்களை நிறுத்துவேன். எனக்கு நாடாளுமன்ற கனவு இல்லை. என் மாவட்டத்திற்குள் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி நின்றால் நான் எதிர்த்து நிற்பேன். ‘நீ எந்த பக்கம் திரும்பினாலும், எதிர்பக்கம் நான் நிற்பேன்.’ என்று தம்பி படத்தில் வருவதைப் போல, நீ என் நிலத்திற்குள் எங்கு வந்தாலும் நான் நிற்பேன்.
ஒருவேளை திமுக மோடியை வீழ்த்துவதற்கு உதயசூரியன் சின்னத்தில் ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்தினால், என் வேட்பாளரை திரும்பப் பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக அந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுத்து விட்டால், நான் நேரடியாக மோதுவேன்.
இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்தால், திமுக எந்தெந்த தொகுதியில் நிற்கிறதோ, அங்கெல்லாம் வேட்பாளரை நான் திரும்ப பெற்றுக் கொண்டு உங்களுக்கு ஆதரிக்கிறேன். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். வருகின்ற தேர்தலில் காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் நான் உங்களை ஆதரிக்கிறேன்” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் சீமானைப் பார்த்து ஐ லவ் யூ என்று கூறினார்.
பதிலுக்கு சீமானும் அவரைப் பார்த்து `ஐ லவ் யூ’ என்று சொல்லிவிட்டு, ``இப்படி சொல்லிட்டுத்தான் இரண்டு பேர் என்னை சுற்றித்திரிகிறார்கள். இதுல நீ வேற. எனக்கு இது பயமல்ல. இனி எத்தனை பேர் வருவார்களோ.
எந்த சந்துல எந்த பாம்பு இருக்கும்னு தெரியலயே. பங்காளி வடிவேலு மாதிரி, ‘இது என்ன பிரமாதம்.. இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. எவ்ளோ வந்தாலும் சமாளிப்போம்.” என்று சிரித்தார். மேலும் தொடர்ந்தவர், ``ஒரு நாள் வீட்டில் இரவு நேரத்தில் செல்போனில், ‘செல்லக்குட்டி செல்லக்குட்டி.’ என்று பேசிக் கொண்டிருந்ததை எனது மாமியார் பார்த்து விட்டு எனது மனைவியிடம் சொல்லிவிட்டார்.
அதற்கு என் மனைவி, ‘அவர் வடிவேலுவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் பேசிக் கொள்வார்கள்.’ என கூறினார். நானும் வடிவேலும் அப்படித்தான் பேசிக் கொள்வோம் அது அப்படியே பரவி விட்டது, அதை அப்படியே கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் நடிகையை பார்த்து ‘செல்லம்’ என்று எடுத்து வைத்து விட்டார். அந்த பிட்டு என்னுடைய பிட்டு தான். நாங்கள் சிரிக்க சிரிக்க பேசுவோம் ஆனால் சீரியஸாக வேலை செய்வோம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/5NVFLC1
0 Comments