தேசிய அளவில் இருக்கும் எட்டு கட்சிகளின் 2020 - 2021-ம் ஆண்டின் சொத்துகள் (Asset and liabilities) குறித்து ஆய்வு செய்து Association for Democratic Reforms (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, சிபிஐ, சிபிஐ(எம்), தேசிய மக்கள் கட்சி ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
2020-21-ல் ரூ.7,297.62 கோடியாக இருந்த எட்டு தேசிய கட்சிகள் அறிவித்த மொத்த சொத்து மதிப்பு 2021-22-ல் ரூ, 8,829.16 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை பா.ஜ.க பெற்றிருக்கிறது. 2020-2021 ஆண்டில் ரூ.4,990 கோடியாக இருந்த பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு, 2021-2022-ல் 21.17 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,046.81 கோடியாக உயர்ந்திருக்கிறது.
காங்கிரஸின் சொத்து மதிப்பில் 2020 - 2021-ல் ரூ.691.11 கோடியாக இருந்தது. 2021-22-ல் 16.58 சதவிகிதம் உயர்ந்து ரூ. 805.68 கோடியாக அதிகரித்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் சொத்துகளில் 2020-21-ல் ரூ.732.79 கோடியிலிருந்து 5.74 சதவிகிதமாக குறைந்து, 2021-22-ல் ரூ.690.71 கோடியாக இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்து ரூ.182.001 கோடியிலிருந்து, 2020-21ல் ரூ.458.10 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மேலும், 2020-21-ம் ஆண்டின் மொத்த தேசியக் கட்சிகளின் கடன்கள் ரூ.103.55 கோடி. இதில் முதலிடத்தில் காங்கிரஸ் ரூ.71.58 கோடி கடன்களையும், சிபிஐ ரூ.16.109 கோடி கடன்களையும், பா.ஜ.க 5.17 கோடி கடன் உள்ளதாக அறிவித்திருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
from India News https://ift.tt/dWrBex4
0 Comments