நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதையொட்டி அரசியல் களம் தேர்தலுக்கான களமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. `இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், ஆளும் பா.ஜ.க அரசின் `ஒரே நாடு, ஒரே தேர்தல்' இந்தியாவின் பெயரை `பாரதம்' என மாற்றுதல் எனப் பல்வேறு அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு கூட்டம் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, ‘‘இனி இந்தியாவை அதன் பழைய பெயரான ‘பாரத்' என அழைக்க வேண்டும். ஏனெனில், பல நூற்றாண்டுகளாக பாரத் எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, `G20' மாநாட்டின் தலைவர்களுக்கான குடியரசுத் தலைவரின் ஆதிகாரபூர்வ அழைப்பிதழில் `பாரத குடியரசுத் தலைவர்' எனக் குறிப்பிட்டிருந்தது. இது இந்திய அளவில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், "ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சி.ஏ.ஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்ன என்ற கேள்வியைப் பின்னுக்குத் தள்ளி, தேசியம் என்ற அரசியல் விவாதத்தை தேர்தலை நோக்கி பா.ஜ.க முன்னெடுக்கிறது" எனக் குற்றம்சாட்டிவருகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-08/65ae0ef9-e9e3-4d34-9a00-e2ef492d88cf/91288_thumb.jpg)
இதற்கிடையில், `இந்தியா' என்ற பெயர் சிந்து நதியினாலேயே (INDUS) வந்தது. `இந்தியா' என்ற பெயருக்கு பாகிஸ்தானும் தகுதியானவர்கள். எனவே, இந்தியா தனது பெயரைப் பாரதம் என அறிவித்துக்கொண்டால், பாகிஸ்தானின் பெயரை `இந்தியா' என மாற்றிக்கொள்ள ஐ.நா-வில் உரிமைக் கோர பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தானின் சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வமாக அதிகாரிகள் யாரும் இது குறித்துப் பேசவில்லை.
from India News https://ift.tt/2UI8xNw
0 Comments