நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்றவிருப்பதாக நேற்று ஒரு தகவல் பரவியது. டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறும் `ஜி 20' மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை, இரவு விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்க, அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திரௌபதி முர்முவை `பாரத குடியரசுத் தலைவர்' ( The President of Bharat)' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-05/ca2c6ed8-cbf6-4448-9ec1-076bed1a1688/14630_thumb.jpg)
இதற்கு `இந்தியா, 140 கோடி மக்களுக்கானதே தவிர, ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல' என எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ X வலைதளப்பக்கத்தில், "இந்தியாவை அழிக்க இயலாது" எனப் பதிவிட்டு, இந்திய அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட்டிருந்தது. அதில் ‘belief’ 'நம்பிக்கை' என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘brief’ 'சுருக்கமாக' என்பது போன்ற சில எழுத்துப் பிழைகள் இருந்தன.
அந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டவுடன் காங்கிரஸ் அந்த X வலைதளப்பதிவை நீக்கிவிட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, தனது X வலைதளப்பக்கத்தில், காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கி, "இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை கூட தெரியாத ஒரு கட்சியிடம் நாம் எதையாவது எதிர்பார்க்க முடியுமா… அவர்களின் இந்தத் தவறு, காங்கிரஸுக்கு அரசியல் சாசனம், டாக்டர் அம்பேத்கர் மீது மரியாதை இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. இது வெட்கக்கேடு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/xd48ocv
0 Comments