`சீமான் தான் சூப்பர்; அவருக்கு தான் ஃபுல் பவர் இருக்கு தமிழ்நாட்ல’ - புகாரை திரும்பபெற்ற விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக 2011-ல் போலீஸில் புகாரளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு, சீமான் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறிவந்த விஜயலட்சுமி, ஒருகட்டத்தில் சீமானுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்

இப்படியிருக்க, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகாரளிக்கப்போவதாக அறிவித்த விஜயலட்சுமி, அதன்படியே புகாரும் அளித்தார். இது தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை செய்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. முதல் சம்மனுக்கு சீமானின் வழக்கறிஞர்கள் ஆஜராகி கடிதம் அளித்தார்கள். இதனிடையே மீண்டும் சீமான் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, ``வழக்கை திரும்ப பெறுகிறேன். நான் பெங்களூரு போக போறேன். திரும்பி சென்னை வரும் மன நிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்து தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். அவருக்கு(சீமான்) இரண்டு சம்மன் அனுப்பினார்கள். அவர் தான் சொல்லிவிட்டாரே, 20 சம்மன் வந்தாலும் கவலைஇல்லை என்று, என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை.

விஜயலட்சுமி

இந்த விவகாரத்தில் முழு முயற்சியுடன் தான் களமிறங்கினேன். ஆனால் முடியல. சீமான் தான் சூப்பர். அவருக்கு தான் ஃபுல் பவர் இருக்கு தமிழ்நாட்ல. அவர் முன்னால யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒத்துகிட்டு போறேன். எதிரியா இருந்தா தான் வேதனையா இருந்திருக்கும். இது நான் உடன் வாழ்ந்த நபர் தானே. பரவாயில்ல. நிறைய வேதனைப்படுத்தினார். திட்டினார். இருந்தாலும் பரவயில்லை. சீமான் எப்பவுமே நல்லா இருக்கட்டும். சக்சஸ்ஃபுல்லா இருக்கட்டும்” என முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/sMX4PUa

Post a Comment

0 Comments