மதுரையில் அதிமுக நடத்திய அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார், ``அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவுக்குத்தான் முழு உரிமை உண்டு. தற்போது 4 படங்களில் நடித்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும், உடனடியாக அமைச்சராக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், அந்த காலத்தில் அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பதவிக்கு வந்தனர்.
திமுக-வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்தவர்கள். அமைச்சர் பி.டி.ஆர் பொருளாதார நிபுணர் என முதல் மாதம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊழல் தொடர்பான ஆடியோ ரிலீஸ் ஆனவுடன் அவருடைய பதவியை டி-புரோமோட் செய்துவிட்டார். அதற்குப் பின் அமைச்சர் மூர்த்திதான் மதுரை முழுவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருகிறார்.
தக்காளி விலையைக்கூட கட்டுப்படுத்த முடியாத அரசாகத்தான் தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. விலைவாசியை உயர்த்திவிட்டு மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் கஞ்சா மிட்டாய் விற்கப்படுகிறது. அதை வாயில் வைத்துக் கொண்டு பள்ளி மாணவர்கள் தள்ளாடுகின்றனர்.
உதயநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் கோயில், கோயிலாக செல்கின்றனர். ஆனால், உதயநிதி சிறுபான்மையினரின் ஓட்டை வாங்க சனாதனத்தை பற்றி பேசிவருகிறார்.
எம்.ஜி.ஆர் பெயரைக் கூட மறந்துவிடுவோம், ஆனால் அண்ணாவின் பெயரை மறக்கமுடியாது. அவரின் பெயரைத்தான் எங்கள் கட்சிக்கே வைத்துள்ளோம்.
அண்ணாவைப் பற்றி பேசினால் அவர்களின் நாக்கை துண்டாக்கும் தொண்டர்கள் எங்களிடம் இருக்கின்றனர். அண்ணாவைப் பற்றி தவறாக பேசினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும்" என்றார்.
சமீபத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் அண்ணா குறித்து தவறான கருத்தை பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்லூர் ராஜூவும் பேசியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/ouDaOqe
0 Comments