டெல்லியில் நடந்து முடிந்த G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். G20 மாநாட்டின் இறுதியில் பிரதமர் மோடி, G20 அமைப்பின் அடுத்த தலைமை பதவிக்கான அடையாளக் குறியீடை (தலைமை பொறுப்பை) பிரேசில் அதிபரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/50507e27-62ff-4de6-85c9-8b6d8734de2c/WhatsApp_Image_2023_09_10_at_14_34_25.jpeg)
அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாமின் ஹனோயில் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது, "இந்தியப் பிரதமர் G20 மாநாட்டை நடத்தியதற்கும், அவரது விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியப் பிரதமர் அமெரிக்கா வந்தபோது இந்திய - அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம். தற்போது நான் இந்தியா சென்றபோது, மனித உரிமைகளை பேணுவதின் முக்கியத்துவம் குறித்தும், ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டை எப்படி வளமாக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தேன்.
சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்மைத்துவம், மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பொதுவான மதிப்புகள் நமது நாடுகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நமது உறவை வலுப்படுத்துவதாகவும் G20 மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சவால்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்கா தலைமையையும் எங்கள் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கவும், நிலையான வளர்ச்சியில் முதலீடு செய்தல்,
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-01/c35a2698-2b9d-46bb-94f8-721014facaf6/WhatsApp_Image_2022_01_25_at_12_29_56_PM.jpeg)
பருவநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தல், உணவுப் பாதுகாப்பு, கல்வியை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என அமெரிக்கா உலகிற்கு நேர்மறையான பார்வையுடன் இருப்பதை உணர்த்தியிருக்கிறோம். மேலும், இந்த G20 மாநாட்டில், உக்ரைனில் சட்ட விரோதப் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்குத் தேவைப்படும் நியாயமான அமைதி குறித்தும் விவாதித்தோம். வியட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலம் உலகம் முழுவதும் உறுதித் தன்மையை வழங்குவதே எங்கள் குறிக்கோள்" எனக் குறிப்பிட்டார்.
from India News https://ift.tt/1oxJyir
0 Comments