`` `நீட் = 0'; பாஜக-வே ஒப்புக்கொண்டுவிட்டது" - மத்திய அரசின் அறிவிப்பால் முதல்வர் ஸ்டாலின் சாடல்!

முதுநிலை மருத்துவ படிப்பை பொறுத்தவரையில் நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் வருகிறது. இதற்கான இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிந்திருக்கும் நிலையில், இன்னும் மருத்துவ இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதால் மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு, நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலே போதும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு நேற்று அறிவித்தது.

நீட்

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ``நீட் முதுகலை படிப்புகளுக்கான (மருத்துவம் / பல் மருத்துவம்) தகுதி மதிப்பெண்கள் அனைத்து வகையிலும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே விண்ணப்பங்களை பதிவுசெய்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பங்களை பதிவுசெய்யத் தேவையில்லை. அவரவர் தங்களின் விருப்பங்களைத் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்படும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு அட்டவணை, மருத்துவ கலந்தாய்வு குழுவின் இணையதள பக்கத்தில் விரைவில் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ``நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுவிட்டது. முதுநிலை மருத்துவ படிப்பில் நீட் தேர்வின் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டிருப்பதன் மூலம், National 'Eligibility' Cum Entrance Test (NEET) என்பதில் Eligibility-க்கு (தகுதி) அர்த்தமில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்

இது, நீட் பயிற்சி மையங்களில் சேருங்கள், தேர்வுக்கு பணம் கட்டுங்கள், அதற்கு மேல் எந்த தகுதியும் தேவையில்லை என்றாகிவிட்டது. நீட் = 0, இதைத்தான் ஆண்டாண்டுகளாக நாங்கள் கூறிவருகிறோம். இப்போது நீட் ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. அதில், தகுதிக்கான எந்த அளவுகோலும் இல்லை.

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத ஒன்றிய பா.ஜ.க அரசு, தற்போது இத்தகைய உத்தரவைக் கொண்டுவந்திருக்கிறார். நீட் என்ற பலிபீடத்தின் மூலம் பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பா.ஜ.க அரசை அகற்ற வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/nOu5qEM

Post a Comment

0 Comments