Tamil News Today Live: ``தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி சரியான நேரத்தில் பேசுவேன்!" - சந்திரபாபு நாயுடு

``தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி சரியான நேரத்தில் பேசுவேன்!"

அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் தேர்தலில் வெற்றிபெற ஆளும் பா.ஜ.க தனது தேசிய ஜனநாயக கூட்டணியையும், எதிர்க்கட்சிகள் தங்களின் புதிய `INDIA' கூட்டணியையும் வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் பி.ஆர்.எஸ் போன்ற சில கட்சிகள் இந்த இரு கூட்டணிகளிலும் இணையாமலும் இருக்கின்றன. இந்த நிலையில் ஆந்திரா எதிர்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ``தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல.

சந்திரபாபு நாயுடு - மோடி

அதுபற்றி சரியான நேரத்தில் பேசுவேன். எனது முன்னுரிமை ஆந்திரப் பிரதேசம் தான். இதுவே எனது அஜெண்டா. மாநிலத்தின் மறுகட்டமைப்பு மற்றும் புனரமைப்புக்கு நான் தயாராவேன்" என்று கூறினார். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபகாலமாக மத்திய பா.ஜ.க-வின் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இணைவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.



from India News https://ift.tt/BaS6nkE

Post a Comment

0 Comments