கடந்த காலங்களில் ஆம் ஆத்மி ஒரே நேரத்தில் பா.ஜ.க-வையும், காங்கிரஸையும் சாடிவந்தாலும் கூட, 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு தன்னுடைய நிபந்தனைக்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டதால் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்துகொண்டது. அதற்கேற்றவாறே, டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது.
இருப்பினும், 2024 தேர்தலின்போது பஞ்சாப்பில், ஆளும் ஆம் ஆத்மி காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி முன்னாள் முதல்வரின் மகனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யுமான சந்தீப் தீட்சித், `பா.ஜ.க-வுக்கும், ஆம் ஆத்மிக்கும் கொள்கைகளில் எந்த வேறுபாடு இல்லை' என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
முன்னதாக நேற்று ஊடகத்திடம் பேசிய சந்தீப் தீட்சித், ``இப்போதிருக்கும் மத்திய அரசு, ஏழைகளின் நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் மோசமான அரசு. இந்த அரசின் செயல்பாடுகளால் நாட்டுக்கோ, ஏழைகளுக்கோ எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பா.ஜ.க-வுக்கும், ஆம் ஆத்மி-க்கும் கொள்கைகளில் எந்த வேறுபாடு இல்லை. டெல்லியை நிர்வகிப்பதில் கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், கல்வித் துறையிலோ அல்லது சுகாதாரத் துறையிலோ ஏதாவது செய்திருக்கலாம். டெல்லி நிர்வாகத்துடன் அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
ஆனால், தன் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால், அவசரச் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் கெஜ்ரிவால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார். எனவே,1977-ல் காங்கிரஸுக்கு எதிராக, ஜனசங்கத்துக்கு ஆதரவளிக்கப் பல அரசியல் கட்சிகள் எடுத்த தவறான முடிவை இப்போது காங்கிரஸ் செய்யக்கூடாது ஏனெனில் பிரிவினைவாத அரசியலை ஆரம்பித்தது ஜனசங்கம் மட்டுமே. இதில் என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டேன். இருப்பினும் கட்சி என்ன நினைக்கிறதென்று பார்ப்போம்" என்று கூறினார்.
from India News https://ift.tt/B6Y8zwb
0 Comments