`கைதி எண் PO1135809, உயரம் 6.25 அடி' ; சிறைச் சென்ற 20 நிமிடங்களில் வெளிவந்த ட்ரம்ப் - நடந்தது என்ன?

அமெரிக்காவில் 2020-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தார். அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

பின்னர், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றமும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றமும் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன. இதில், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் மட்டும் ட்ரம்ப் உட்பட 19 பேர் வெள்ளிக்கிழமைக்குள் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

அதன்படி, அட்லாண்டாவிலுள்ள ஃபுல்டன் கிண்டி சிறையில் (Fulton County jail in Atlanta) நேற்று ஆஜரான ட்ரம்ப் கைது (Formal Arrest) செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவருக்கு PO1135809 என்ற எண் வழங்கப்பட்டது. அதோடு, அவரின் உயரம் 6.25 அடி, எடை 97 கிலோ, முடியின் நிறம் ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி (Blond or Strawberry) எனப் பட்டியலிடப்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இருப்பினும் ட்ரம்ப் வெகுநேரம் சிறையில் இருக்கவில்லை. 2,00,000 அமெரிக்க டாலரை பிணையாக செலுத்திய ட்ரம்ப், சிறைக்குச் சென்ற அடுத்த 20 நிமிடங்களில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``இங்கு நடந்தது நீதியின் கேலிக்கூத்து. நான் உட்பட இங்குள்ள யாரும் எந்த தவறும் செய்யவில்லை" என்று கூறினார்.



from India News https://ift.tt/8u75E6o

Post a Comment

0 Comments