தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா முதல் ரிக்க்ஷா ஓட்டிய முன்னாள் அமைச்சர் வரை... | News In Photos

புதுச்சேரியில் சர்வதேச குறும்பட, ஆவணப்பட விழா துவங்கவுள்ள நிலையில், ஊடக்திரை இயக்க குழு ஒருங்கிணைப்பாளர் லெனின் பாரதி தலைமையில் விழா மலர் வெளியிடப்பட்டது.
ஆடி 18: சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்பதால் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா வந்த சிறுவர்கள்.
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு மேட்டூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மீன் கடைகளில் வியாபாரமும் அதிகரிப்பு.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218 வது நினைவு தினத்தில் அவர் தூக்கிடப்பட்ட சங்ககிரி மலைக்கோட்டையில் அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நீராடி வழிபாடு செய்ய கூடியிருக்கும் மக்கள்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி வீரநாராயணமங்கலம் பழையாற்று கரையில் தாலி கயிறு அணிந்து வணங்கி வழிபட்ட பெண்கள்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி வீரநாராயணமங்கலம் பழையாற்றில் முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மேயரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
இராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர் கூட்டம் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் - ஆடி 18-ம் பெருக்கினை முன்னிட்டு ஆவுச்சுரம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி வில்லியனூர் ஏழை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரியாற்றில் வழிபாடு நடத்திய பெண்கள்.
புதுச்சேரியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அதிமுக ஓபிஎஸ் அணியை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி: மாநகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில் டவுண் ஆர்ச் முதல் குறுக்குதுறை வரை சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைப்பதற்க்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி எண்ணூர் பகுதியில் உள்ள சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஒன்றிணைந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் நடத்தினர். இடம்:எண்ணூர் கத்திவாக்கம்
சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பான குளியலை மேற்கொள்வதற்காக தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆடி 18 திருவிழாவை ஒட்டி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டனர்
மதுரையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை கடந்த இரண்டு நாட்களாக பெறாத நிலையில், நேற்று விண்ணப்பிக்க காத்திருக்கும் மகளிர்கள்.
மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக விளம்பர போஸ்டர்களை ரிக்‌ஷா வண்டியில் ஒட்டிய பின் ரிக்‌ஷா ஓட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
இராமநாதபுரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
நீலகிரி : துரியன் பழ சீஸன் துவங்கியுள்ள நிலையில், பர்லியாறு அரசுப் பழப் பண்ணையில் துரியன் பழங்கள் புக்கிங் முறையிலும் நேரடியாகவும் பயராளிகளுக்கு கிலோ ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.


from India News https://ift.tt/sM0S6Ne

Post a Comment

0 Comments