டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் G20 மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதில் கலந்துக்கொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது.
டெல்லியில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள், மால்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றை செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரைமூடுவதற்கு மத்திய அரசும், டெல்லி அரசும் முடிவு செய்திருக்கின்றன. G20 மாநாட்டுக்காக இரண்டு அரசுகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு சீக்கியர்களை இனப்படுகொலை செய்வதாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தானிகள் எழுதி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் நேற்று 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில், காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தை ஆதரிக்கும் வகையான,"டெல்லி பனேகா காலிஸ்தான்" மற்றும் "காலிஸ்தான் ஜிந்தாபாத்" போன்ற வாசகங்ளை எழுதியிருக்கின்றன. உடனடியாக டெல்லி காவல்துறை அந்த வாசகங்களை அழித்தது. மேலும், 153 ஏ, பிரிவு 505 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடித்து, விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
from India News https://ift.tt/Ff25kgZ
0 Comments