`வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற பெயரில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க மாநாடு மதுரை வலையங்குளம் பகுதியில் நடந்தது. தேவாவின் இசைக்கச்சேரி, ரோபோ சங்கர்- ராமர் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி, கிராமியப் பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி ஆகியோரின் நிகழ்ச்சி, வைகைச்செல்வன் நடுவராக இருந்து நடத்தப்பட்ட பட்டிமன்றம், கவியரங்கம் என நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாநாடாக்குக்கான பிரமாண்டமான நுழைவுவாயில்கள், மேடைகள், தொண்டர்கள் அமர 1.25 இருக்கைகளுடனான அரங்குகள், 4 திசைகளிலும் உணவுக் கூடங்கள், தற்காலிக கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் கொளுத்தும் வெயிலில், தொண்டர்களுக்கு கெட்டுப்போன புளியோதரை போடப்பட்டதாகவும், இதனால் வட்டை வட்டையாக டன் கணக்கில் உணவு கீழே கொட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநாடு உணவு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தர இருந்தனர். ஆனால் போலீஸாரின் கெடுபிடியால் 15 லட்சம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு வந்தனர். இதனால்தான் கொஞ்சம் உணவு வீணாகிவிட்டது. இதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி பேசுகின்றன" என்றார்.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க மாநாடு வெற்றியடைந்ததற்காக, வலையங்குளம் கருப்பண்ண சாமிக்கு நேர்த்திக்கடனாக மொட்டைப் போட்டு கிடா வெட்டி கறி விருந்து நடத்தினார் ஆர்.பி.உதயகுமார். சுமார் ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, குடல் கூட்டு, குழி ஆம்லெட்டுடன் தடல்புடலாக விருந்து கொடுத்தார். இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், ``கடந்த வாரம் இதே இடத்தில் எள்ளுக்கூட விழ முடியாத அளவுக்கு தொண்டர் கூட்டம் நிறைந்தது. மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் எல்லா திசையிலும் வரிசை கட்டியிருந்தன. மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுக்கப்பட்டது பெருமை. அதற்காக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த அன்னதானம் நடத்தப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில், ``புளிச்சோற்றை மறைக்கவே இந்தக் கறி விருந்து நடத்தப்படுகிறது" என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/pv6SlYA
0 Comments