`ஆம், மோடி அடுத்த ஆண்டும் கொடியேற்றுவார், ஆனால்...!' - மல்லிகார்ஜுன கார்கே சொல்வதென்ன?

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில், தொடா்ந்து 10-வது முறையாகப் பிரதமா் மோடி தேசியக்கொடி ஏற்றினார். அப்போது உரையாற்றிய அவர், "2019-ல், செயல்திறன் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஆசீர்வதித்தீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கானது. 2047-ன் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன்வைப்பேன்” எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``ஒவ்வொரு கட்சியினரும் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் மீண்டும் வெற்றிபெறுவோம் என்று கூறுவார்கள். ஆனால் வெற்றி மக்கள் கையில், வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது. 'நான் மீண்டும் 2024-ல் கொடியேற்றுவேன்' என்பது ஆணவம். அடுத்த ஆண்டு மீண்டும் மோடி தேசியக்கொடியை அவரது வீட்டில் ஏற்றுவார். சுதந்திர தினத்தன்றுகூட எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயந்து தொடர்ந்து கருத்து தெரிவிப்பவர், எப்படி தேசத்தை கட்டியெழுப்புவார்?

இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதை வேதனையுடன் கூறுகிறேன். எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க புதிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சி.பி.ஐ மட்டுமல்ல, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை, தேர்தல் ஆணையமும் பலவீனமடைந்து வருகின்றன.

மல்லிகார்ஜுன கார்கே

எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பதவி நீக்கம், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். நாடாளுமன்றத்திலேயே மைக்குகள் ஆஃப் செய்யப்படுகின்றன, எதிர்க்கட்சி எம்.பி-க்களின் பேச்சுகள் துண்டிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன" எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், "2024 தேர்தலில் யார் திரும்பி வருவார்கள், யார் வரக் கூடாது என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள். குறைந்தபட்சம் 2024 வரையாவது காத்திருப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/GTQ3CFs

Post a Comment

0 Comments