புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஜூலை மாதம், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ சந்திரசேகர், தன்னிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக டி.ஜி.பி-யிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "நான் பொதுப்பணித்துறையில் வேலை செய்து வருகிறேன். சென்னையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றிவந்தார். அது குறித்து கடந்த மார்ச் மாதம் உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று எஸ்.ஐ சந்திரசேகரிடம் புகாரளித்தேன். அந்தப் புகார் குறித்து அவர் விசாரித்தபோது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ சந்திரசேகர், தனக்கு இரிடியம் வியாபாரம் செய்யும் கும்பலோடு பழக்கம் இருக்கிறது. அவர்கள் வியாபாரம் முடிந்து பெரும் தொகைக்குக் காத்திருக்கின்றனர். சென்னையில் இருப்பவருக்குக் கொடுத்து ஏமாந்ததுபோல இல்லாமல், தன் மூலம் கொடுத்தால் பணம் உறுதியாகத் திரும்பக் கிடைக்கும் என்றார். அதற்காக ரூ.30,000 மட்டும் கொடுத்தால் போதும் என்றார். அதை நம்பி அவரிடம் ரூ.30,000 கொடுத்தேன்.
சட்டசபை கூட்டத்தொடர் பணி இருப்பதால், அது முடிந்தவுடன் சென்னை சென்று பணத்தைப் பெற்று வரலாம் எனத் தெரிவித்தார். ஆனால், சட்டசபை கூட்டத்தொடருக்குப் பிறகு என் தொலைபேசி அழைப்பை எஸ்.ஐ சந்திரசேகர் ஏற்கவில்லை. அதையடுத்து, அவரை நேரில் சந்தித்து, சென்னையில் ரூ.5 லட்சம் பண விவகாரத்தை நானே பார்த்துக்கொள்கிறன், நான் கொடுத்த ரூ.30,000-ஐ திருப்பிக் கொடுங்கள் என்றேன். ஆனால், இன்றுவரை அவர் திருப்பித் தராமல் ஏமாற்றிவருகிறார். ஒருவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்கச் சென்ற என்னிடமே எஸ்.ஐ ஏமாற்றியதை எண்ணி மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன்.
இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தைத் திருப்பித்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகார்மீது துறைரீதியிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோசடிப் புகாரில் சிக்கிய எஸ்.ஐ சந்திரசேகரன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இந்த நிலையில் கடற்கரைச் சாலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அந்த சர்ச்சை எஸ்.ஐ சந்திரசேகர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/mbjINMi
0 Comments