உத்தரகாண்டில் செல்போனில் பேசியபடியே முதலமைச்சருக்கு சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, கடந்த வாரம் மாநிலத்தில் பெய்த கனமழையால் கோட்வார் பகுதியில் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு பெரிய பாலங்கள், ஒரு சிறிய பாலம் என மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன.
அதையடுத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோட்வார் பகுதியில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிடும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 11) ஹரித்வாரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோட்வாரின் கிரஸ்டன்கஞ்ச் ஹெலிபேடுக்கு வந்தார். அப்போது, முதல்வரின் வருகையை முன்பே அறிந்த உள்ளூர் அதிகாரிகள் அவரை வரவேற்க விரைந்தனர்.
அப்போது ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வந்த முதல்வருக்கு, கோட்வாரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) சேகர் சுயால் செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்திருக்கிறார். பின்னர், சேகர் சுயாலின் இத்தகைய செயல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதுவே அவரின் பணியிட மாற்றத்துக்கும் காரணமாக அமைந்தது. சேகர் சுயால் தற்போது நரேந்திர நகரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதோடு, கோட்வார் பகுதி புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஜெய் பலுனி நியமிக்கப்பட்டார்.
from India News https://ift.tt/Wmn7oRh
0 Comments