கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்த சூரத் கீழமை நீதிமன்றம், அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக, எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி, தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார் ராகுல் காந்தி.
உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டாண்டுக்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி உடனடியாக திரும்ப அளிக்கப்பட வேண்டும்" என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தினார். ஆனால், இப்போதுவரை அந்த மனு மீதான எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கதில்,
"ராகுல் காந்தி குற்றவாளி என சூரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த 26 மணி நேரத்தில், எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டது நாடாளுமன்றம். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து 26 மணிநேரம் கடந்துவிட்டது. அவரது எம்.பி பதவியை ஏன் இன்னும் மீண்டும் வழங்கவில்லை... ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராகுல் காந்தி பங்கேற்பதைக் கருதி பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
from India News https://ift.tt/oIRPyUu
0 Comments