தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மிகுந்திருப்பதாக குற்றம்சாட்டிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, DMK files வெளியிட்டார். அதைத் தொடந்து, ஊழலுக்கு எதிராக "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் கடந்த மாதம் 28-ம் ராமேஸ்வரத்திலிருந்து, நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 6 மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார் அண்ணாமலை என பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.
Vijay Makkal iyakkam members thank @annamalai_k for giving way to ambulance .A handshake for future ? This was in the middle of honouring MaVeeran Azhagu Muthu kone! pic.twitter.com/qau0C83Xn0
— karthik gopinath (@karthikgnath) July 12, 2023
இந்த நிலையில், தற்போது அவரது பயணம் மதுரையை அடைந்திருக்கிறது. நேற்று மதுரையில் நடந்த இந்தப் பயணத்தில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கக் கொடியுடன் சிலர் பங்கேற்றனர். அது தொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதாமக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/cNISfZ4
0 Comments