2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி, ஆட்சியை தி.மு.க-விடம் இழந்தது அ.தி.மு.க. இந்த தோல்விக்கு காரணம் அ.ம.மு.க உருவானாதும், பா.ஜ.க-வுடான கூட்டணி என பல கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தங்களின் தோல்விக்கு பாஜகவுடான கூட்டணிதான் முக்கிய காரணமென தெரிவித்தனர். அதேபோலதான், அதிமுக சீனியரான அன்வர் ராஜா-வும் கருத்து தெரிவித்தார். ஆனால், அதோடு நிற்காமல், தலைமை குறித்து கடுமையான விமர்சனம் வைத்ததோடு, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். இதனால், சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தில் இருந்து வெளியேறினார் அன்வர் ராஜா. பின்னர், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது. இந்த சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த பின்னணி குறித்து எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம்.
"அ.தி.மு.க என்ற கட்சி உருவாகும்போதே அன்வர் ராஜா இருந்தார். ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளரென எம்.ஜி.ஆரே அன்வர் ராஜாவுக்கு பதவிகளை கொடுத்தார். அதேபோல, அம்மா இருக்கும்போதே எம்.எல்.ஏ, அமைச்சர், எம்.பி, தலைமை கழக பொறுப்பு என கட்சியில் இஸ்லாமிய சமூகத்தின் முகமாக வலம் வந்தார். அம்மா மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்தார். ஆனால், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், தலைமையின்மீதே விமர்சனம் வைக்க தொடங்கினார். குறிப்பாக, சசிகலா இருந்திருந்தால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது என்பது அவரது நிலைப்பாடு. எனவேதான், பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து பொது வெளியில் விமர்சிக்க தொடங்கிவிட்டார். அதனால்தான் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் போனதற்கு பின்பு கட்சிக்கு இஸ்லாமிய முகம் தேவைப்பட்டது. அதற்காகதான், தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக கொண்டு வரப்பட்டார். ஆனால், உசேனால் அதிமுக இஸ்லாமிய முகமாக ஜொலிக்க முடியவில்லை.
இந்நிலையில்தான், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அ.தி.மு.க-வுக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவே கிடையாது என சீனியர்கள் நினைத்தனர். இதுதொடர்பான சேலம் நெடுஞ்சாலை நகரிலும், பசுமை வழிச்சாலையிலும் எடப்பாடியுடன் சீனியர்கள் ஆலோசனை செய்தனர். 'பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி கிடைக்காது என நாம் அப்படியே இருந்துவிட முடியாது. அதை ஓரளவுக்காது சரிசெய்ய வேண்டும்' என்று எடப்பாடி எண்ணிதான், அன்வர் ராஜாவை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்தது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
அதன்படி, மதுரை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்காக ஜூலை 28-ம் தேதி ராமநாதபுரம் சென்ற வேலுமணி, ராமநாதபுரம் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் முனியசாமி மூலமாக அன்வர் ராஜாவிடம் பேசியிருக்கிறார். அவரும் அழைப்பு வருமென்றுதான் காத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால், 'பா.ஜ.க குறித்து பேசுவதற்கு எனக்கு தடையெதும் விதிக்கக்கூடாது. இதற்கு ஓகே என்றால் உடனே கட்சியில் சேர்ந்து விடுகிறேன்' என கண்டிஷன் போட்டு இருக்கிறார் அன்வர்.
இதற்கு வேலுமணி தரப்பிலிருந்து, ' பா.ஜ.க-வுடன் கூட்டணி என்னவாகுமென்றே தெரியவில்லை. எனவே அதுகுறித்து நீங்களாக விவாதத்தை கிளப்பக்கூடாது. தேவைப்படும்போது விமர்சனம் வைத்துக் கொள்ளலாம்' என்று கண்டிஷன் போடப்பட்டு இருக்கிறது. இருதரப்பு கண்டிஷனுக்கும் மேலிடம் ஓகே சொன்னதால்தான் ஜூலை 5-ம் தேதி மீண்டும் கட்சியில் அன்வர் இணைந்து இருக்கிறார். அன்வர் ராஜாவின் வருகை என்பது அ.தி.மு.க-வில் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுபான்மையினரின் வாக்குகளை பெற எடப்பாடி எடுத்த நகர்வுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது." என்றனர் விரிவாக
அதிமுக-வில் இணைந்த பிறகு, பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்வர் ராஜா, ``விமர்சிப்பது என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இன்றைக்குக்கூட பா.ஜ.க தலைவர்கள் அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள். பா.ஜ.க-வின் ஆட்சியில் தி.மு.க நான்காண்டுகள் இடம்பெற்றிருந்தது. முரசொலி மாறன், ஒன்றரை ஆண்டுகள் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. எங்களின் கொள்கைக்கு ஏதாவது இடர்பாடு ஏற்படுமானால், எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதிலிருந்து விலகுவதற்கு அ.தி.மு.க தயங்கியது இல்லை. ஒற்றை ஆளாக ஜெயலலிதா பத்து நாள்கள் டெல்லியில் தங்கியிருந்து, பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு வந்தார். எனவே, அ.தி.மு.க புதிதாக பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கிறது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை” என்று முதல் நாளிலே அதிர வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/mAWtDKl
0 Comments