`நிலவை இந்து ராஷ்டிரமாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்’ - இந்து மகாசபா தேசியத் தலைவரின் பலே கோரிக்கை

இஸ்ரோ, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விதமாக கடந்த ஜூலை 14-ம் தேதி `சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் ஏவியது. அதைத் தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி மாலை 6 மணியளவில், சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, வரலாற்றின் பக்கங்களில் இந்தியாவின் பெயரை எழுதியது.

சந்திரயான்- 3

அதோடு, நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு `சிவசக்தி பாயின்ட்' என்று பிரதமர் மோடி பெயரும் சூட்டினார். இன்னொருபக்கம், `விக்ரம் லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்' என்று உள்ளூர் ஊடகங்களிடம் கூறிவந்த குஜராத் நபரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்திந்திய இந்து மகாசபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், `நிலவை இந்து ராஷ்டிரமாக (Hindu Rashtra) நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சக்ரபாணி மகராஜ் சமூக வலைதளங்களில், ``நிலவை இந்து சனாதன ராஷ்டிராவாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்.

அனைத்திந்திய இந்து மகாசபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ்

அதோடு, `சந்திரயான் 3' தரையிறங்கிய, சிவசக்தி பாயின்ட் எனப் பெயர்சூட்டப்பட்ட இடத்தை அதன் தலைநகராக உருவாக்க வேண்டும். இதன் மூலம், ஜிகாதி மனப்பான்மைகொண்ட எந்த பயங்கரவாதிகளும் அங்கு செல்ல முடியாது. எனவே, எந்தப் பயங்கரவாதிகளும் அங்குச் செல்லமுடியாதபடி இந்திய அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும்" என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/BLqimCa

Post a Comment

0 Comments