எதிர்க்கட்சிகளின் `இந்தியா' (I.N.D.I.A) கூட்டணி, 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் வகையில் இரண்டு கூட்டங்களை நடத்திமுடித்திருக்கிறது. `இந்தியா' கூட்டணியில் இதுவரை 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக, செப்டம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்துக்கு `இந்தியா' கூட்டணி தற்போது தயாராகி வருகிறது. அதேசமயம் பா.ஜ.க-வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறது.
கடைசியாக பா.ஜ.க நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் அங்கம் வகித்தன. இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் `இந்தியா' கூட்டணியுடன் தொடர்பில் இருப்பதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மா தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில் இதைத் தெரிவித்த அலோக் சர்மா, ``பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 38 கட்சிகளில், நான்கைந்து கட்சிகள் இந்தியா கூட்டணியுடன் தொடர்பில் இருக்கின்றன. அவர்களில் சிலர், 2024 தேர்தலுக்கு முன்பாகவே மிக விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய CAG அறிக்கைகள், NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்), சுகாதாரம் மற்றும் காப்பீட்டுத்துறைகளில் வெளிவந்திருக்கும் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணைக்கு எப்போது உத்தரவிடுவீர்கள் என்று பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் முத்தரப்பு மகா விகாஸ் அகாடியை காங்கிரஸ் வழிநடத்துமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ``நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்க்கையில், யார் வழிநடத்துவது என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த ஆணவமிக்க அரசை எவ்வாறு அகற்ற முடியும் என்பதுதான் முக்கியம்" என்று அலோக் சர்மா கூறினார்.
அதோடு, அமேதியில் அடுத்தாண்டு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அலோக் சர்மா, அது குறித்து ராகுல் காந்தி குடும்பம்தான் முடிவுசெய்யும் என்றும், காங்கிரஸின் தொகுதி அளவிலான தலைவர் ஒருவர் அமேதியில் போட்டியிட்டால்கூட ஸ்மிருதி இரானி தோல்வியடைவது உறுதி என்றும் தெரிவித்தார்.
2019 லோக் சபா தேர்தலில் அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/zhL2jnu
0 Comments