``சட்டசபையில் அன்று ஜெயலலிதா நாடகமாடினர்" - நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் மணிப்பூர் வன்முறை குறித்த விவாதங்களே முக்கியமாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற மூன்று நாள் விவாதத்தில், பிரதமர் மோடி கடைசி நாளில் கலந்துகொண்டார். இதற்கிடையில் மூன்றாவது நாள் விவாதத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க-வை கடுமையாகச் சாடினார்.

நிர்மலா சீதாராமன்

அதாவது, ``1989, மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஜெயலலிதாவின் சேலை, இழுக்கப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர்... அந்த ஜெயலலிதாவை தி.மு.க மறந்துவிட்டதா? இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் திரௌபதி குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது" என்று நிர்மலா சீதாராமன் தி.மு.க பற்றி காட்டமாகப் பேசினார்.

இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து கடுமையான பதில் விமர்சனங்களும் வந்தன. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது அதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார். முன்னதாக ஆங்கில ஊடகமான `ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரியின் நேர்காணல் ஒன்றில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது, `மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 1989-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, பெண்கள் பாதுகாப்புப் பிரச்னையில் திமுக-வைத் தாக்கிப் பேசினார். அதற்கு உங்களின் பதில் என்ன?' என்ற ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், `தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தகவல்களை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது அவர் செய்த நாடகமென்று, அப்போது அவையிலிருந்த அனைவருக்குமே தெரியும். இதுபற்றி முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே, `ஜெயலலிதா போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் ஒத்திகை பார்த்தார். அப்போது நானும் உடனிருந்தேன்' என்று கூறியிருக்கிறார். எனவே, தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளை திரிபுபடுத்தும் நிர்மலா சீதாராமனின் செயல் வருத்தமளிக்கிறது. மேலும், அது தவறாக வழிநடத்தப்படுகிறது" என்று கூறினார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/8OKnNw2

Post a Comment

0 Comments