எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சிகள் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் நடத்துவது, இதற்கான துணைக் குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகச் சதி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார். திரிணாமுல் சத்ர பரிஷத் (டிஎம்சிபி) தொடக்கத் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு ஒரு எதேச்சதிகார ஆட்சியை எதிர்கொள்ளும். பா.ஜ.க மக்களவைத் தேர்தலை டிசம்பரிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலோ நடத்தலாம் என்று நான் பயப்படுகிறேன்.
சமூகங்களுக்கிடையில் பகைமை எனும் கோரப்பிடியில் நாட்டை சிக்கவைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நம் நாட்டை வெறுப்புக்குப் பெயர்போன தேசமாக மாற்றிவிடும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஏற்கனவே அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்து வைத்திருக்கிறது பா.ஜ.க. எனது மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகச் சதி நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய புலனாய்வு அமைப்புகளால் அவர் கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அபிஷேக் பானர்ஜி, ``நான் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயணம் செய்தபோது, நான் திரும்பி வரமாட்டேன் என்று ஒரு வதந்தி பரவியது. எனது குடும்பப்பெயர் மோடியோ அல்லது மல்லையாவோ அல்ல. என் குடும்பப்பெயர் பானர்ஜி. எந்த அழுத்தமான சூழல் வந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. பயந்து நாட்டை விட்டு ஓடமாட்டேன்.
தலை நிமிர்ந்து, சரணடையாமல் எப்படிப் போராடுவது என்பது எங்களுக்குத் தெரியும். எனக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரம் இருந்தால் கூட, அமலாக்கத்துறையோ, சிபிஐ-யோ தேவையில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். தூக்கு மேடைக்கு நடந்து வந்து நானே தூக்கில் தொங்குவேன். ஆளும் அரசுக்கு இதைச் சொல்லத் துணிச்சல் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/tXaG3xb
0 Comments