அறுசுவை உணவு; பந்தலில் 3 லட்சம் பேர், மேடையில் 500 பேர், 10000 சமையல் கலைஞர்கள்; ADMK மாநாடு அப்டேட்

அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 20-ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கான பந்தல் அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் செல்லூர் ராஜூ உட்பட அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு, அங்கு நடந்த பணியை மேற்பார்வை செய்தனர். இந்நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூவிடம் மாநாட்டின் அமைப்பு குறித்து நாம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர், ``ஏறத்தாழ 1,000-லிருந்து 1,500 கலைஞர்களைக் கொண்டு இந்த பந்தல் அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதேபோல் கட்டவுட் மற்றும் கோட்டை அமைக்கும் பணிக்கென 500 முதல் 600 பேர் வரையும், பொருட்காட்சி அமைக்கும் பணியில் பிரத்யேகமாக 500 பேரும் பணிபுரிகின்றனர்.

அதிமுக மாநாடு

மொத்தம் மூன்று இடங்களில் பந்தல் அமைய இருக்கின்றது. மூன்று இடங்களிலும் கிட்டத்தட்ட 400 கவுன்ட்டர்கள் இருக்கும். இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில் 15 அல்லது 16-ம் தேதிக்குள் இந்த பணியெல்லாம் நிறைவுறும்படி விரைவாக நடைபெற்று வருகிறது.

இதுவரைக்கும் எந்தக் கட்சி மாநாடும் இந்தளவுக்கு சிறப்பாக பெரிய பந்தல் அமைப்புடன் நடைபெற்றது இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி நிர்வாகிகள் அமருகின்ற வகையில், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இது புது மாதிரியானது, ஏறத்தாழ 1,00,000 அல்லது 1,50,000 நபர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதிகளும், மொத்தமாக 3 லட்சம் பேர் பார்க்கக்கூடிய அளவில் பந்தல் வசதியும் அமைக்கபடவிருக்கிறது. அதேபோல மிக பிரமாண்டமான அளவில் 500 பேர் அமரக்கூடிய அளவில் மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. மேடையின் இருபுறங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கென இரண்டு மேடைகளும், டிஜிட்டல் முறையிலும் புது மாதிரியாக இந்த மேடை அமைக்கப்படவிருக்கிறது" என்றார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`வரலாற்றைப் பேசக்கூடிய மாநாடு!'

தொடர்ந்து பேசியவர், ``இந்த மாநாட்டின் நிறைவில் பார்க்கும்போது இது போன்ற எந்த ஒரு மாநாடும் நடந்திருக்காது, நடக்கவுமிருக்காது. நடந்தாலும் அது எடப்பாடியார் தலைமையிலான மாநாடாகவே இருக்கும். குறிப்பாக மதுரையில் நடக்கக்கூடிய இந்த மாநாடு வரலாற்றைப் பேசக்கூடியதாகவே இருக்கும். இதுவரை மதுரைக்கு பெருமை மீனாட்சி அம்மன், மல்லிகை பூ, ஜல்லிக்கட்டு பேசபடுவதுபோல், இந்த அ.தி.மு.க மாநாடும் பேசக்கூடிய மாநாடாகவே இருக்கபோகின்றது.15-ம் தேதியிலிருந்து சித்திரை திருவிழாவின்போது மக்கள் அழகர் பெருமானை தரிசிப்பதுபோல இந்த மாநாட்டைப் பார்ப்பதற்கு வரவிருக்கிறார்கள்.

அதிமுக மாநாடு

பிரமாண்ட கோட்டை வாசல் ஒன்று கட்டப்பட உள்ளது, அந்தக் கோட்டை வாசல் முன்பு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றவுள்ளார். 10,000 கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மூன்றாவது தலைமுறை தொண்டர் படை, இளைஞர் பாசறை, மாணவரணி, அம்மாப் பேரவையில் உள்ள உறுப்பினர்கள் சீருடை அணிந்து எடப்படியாருக்கு வணக்கம் செலுத்த உள்ளார்கள். பிறகு பொருட்காட்சி தொடங்கிவிடும்.

இம்மாநாட்டில் சிறப்பாக 50 ஆண்டுக்காலமாக கழகத்தில் பணியாற்றிய மூத்த உறுப்பினர்களுக்கு எடப்பாடியார் பொற்கிழி வழங்க உள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு காலையிலே பொற்கிழி வழங்கப்படும் .

மாநாட்டில் உணவு வகைகள்:

பொதுச்செயலாளரை பொறுத்தவரை எல்லா வகையான உணவு வகைகளையும் வழங்க வேண்டுமென ஆசை. ஆனால் வருகின்ற தொண்டர்களுக்கு அறுசுவை உணவு காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பரிமாறப்படவிருக்கிறது. மூன்று இடங்களில் உணவுக்கூடம் அமைய இருக்கின்றது. மூன்று கூடங்களிலும் கிட்டத்தட்ட 10,000 சமையல் கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அதை முறைப்படுத்துவதற்கென தொண்டர் படை, தன்னார்வலர்கள், பாக்சர்களை நிற்கவைத்து முறைப்படுத்தி எல்லா இடங்களிலும் உணவு வழங்கவுள்ளோம். 450 சுற்று என பத்து நிமிடங்களுக்கு 100 பேர் வாங்கிவிட்டு செல்லும்படி செய்திருக்கிறோம் .

தண்ணீர் முதல் பார்க்கிங் வசதி வரை:

தண்ணீர் வசதியில் இருந்து கழிப்பறை வசதி வரை எல்லாமே இங்கு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமாக பார்க்கிங் வசதி. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படக் கூடாது என்பதே பொதுச்செயலாளரின் நோக்கம். அதற்காகேவே இந்த இடம் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

நான்கு புறங்களிலும் தேசிய சாலைகள் அமைந்திருக்கிறது. நான்கு திசைகளிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கி.மு, கி.பி என வரலாறு பேசும் மாநாடு:

இந்த மாநாடானது கி.மு, கி.பி என்று பேசக்கூடிய அளவில் நிச்சயமாக அமையும். இந்த மாநாடு முடிந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிச்சயமாக மிகப்பெரிய அடி விழும். ஏற்கெனவே அவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாடு முடிந்த பிறகு மிகப்பெரும் பயத்துடன் தி.மு.க-வின் ஆட்சி நாள்கள் எண்ணப்படும் என்பதையும்" எனக் கூறினார்.



from India News https://ift.tt/JATQxyw

Post a Comment

0 Comments