Tamil News Today Live: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு... இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு... இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

எடப்பாடி பழனிசாமி - சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடுத்தார். இதில் முதலில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எடப்பாடி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. மேலும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த டெண்டர் வழக்கில் தான் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி காலமானார்!

உம்மன்சாண்டி

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். 79 வயதில் மரணமடைந்த உம்மன் சாண்டியின் உடல் பெங்களூரில் இருந்து கேரளா கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

முழு விவரம்...



from India News https://ift.tt/wIxafAs

Post a Comment

0 Comments